Friday, July 16, 2010

ஜாகிர் நாயக்கும் அவர்தம் தாஃவாவும்

ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவருக்கு தாவா செய்கிறார் என்பதால், அவர் அல்லாஹ்வை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்ல அனுமதி இல்லை. அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ் மட்டுமே எல்லாம் அறிந்தவன். நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் தன் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலம் நமக்கு தெரிய வைத்தவை மட்டுமே. அதற்கு மேலாக நாம் அல்லாஹ்வை பற்றி வர்னித்தால், அந்த வர்னனை ஒரு வேலை சரியாக இருந்தாலும் அது பெரும் பாவமாகும்.

எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!
(அல் குர்'ஆன் 7:33)
 
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்(தான் அதனை) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்.
(அல் குர்'ஆன் 16:74)

அல்லாஹ்வை பற்றி இட்டுக்கட்டி கூறுவது இனைவைக்கும் பாவத்துடன் சேர்த்து அல்லாஹ் நமக்கு சொல்லியுள்ளான்.இது எவ்வளவு பெரிய பாவம் என்று நாம் என்னிப்பார்க்க வேண்டும்.

" அல்லாஹ் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் இட முடியும்" என்று சொல்வது மிகப்பெரிய பாவமான வார்த்தைகள். அல்லாஹ் செய்ய முடியாது என்று அவன் ஜாக்கிர் நாயக் அவர்களுக்கு வஹீ மூலமாக அறிவித்தானா ? அல்லாஹ் தன் ஆற்றலை பற்றி நமக்கு எந்த அளவில் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலமாக தெரிவித்துள்ளானோ, அதை மட்டும் நமக்கு போதுமானதாக ஆக்கிக்கொண்டு தேவை இல்லாத மேதாவித்தனமான பகுத்தறிவு, லாஜிக் போன்றவற்றினால் நாம் அல்லாஹ் மீது வைத்துள்ள ஈமானை நாமே சிதைக்க வேண்டாம்.

"என் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவள் கையை வெட்டுவேன்" என்று சொன்ன நபியின் மார்கத்தில் நாம் வந்து, "ஜாக்கிர் நாயக் இப்படி செய்தால் பரவாயில்லை, அவர் தாயீ" என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை. இஸ்லாத்தையே சிதைத்து செய்யும் தாவா நமக்கு தேவை இல்லை.அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு, அல்லாஹ் பற்றியே இட்டுக்கட்டலாமா? இது எப்படி உள்ளது என்றால் அல்லாஹ் இசையை ஹராமாக ஆக்கியுள்ளான். ஆனால் இந்த ஹராமை வைத்துகொண்டு அல்லாஹ்வை பற்றியே பாடுகிறார்கள். செய்வது எவ்வளவு பரிசுத்தமான மனதுடன் செய்தாலும் இஸ்லாத்தை தகர்க்கும் விதமாகவும் சுன்னாஹ் இல்லாமல் செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. வல்லாஹு அஃலம்.


--சகோ. மஸூத் பின் அஹ்மத் (இணையதளம் ஒன்றில்)

Tuesday, July 13, 2010

தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் - ஒரு பார்வை

இன்று உண்மையில் தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் தவ்ஹீதைத் தான் போதித்துக் கொண்டிருக்கின்றனவா என்று யோசித்தால் இல்லை என்பதே பதிலாகும். இவர்கள் போதித்துக்கொண்டு இருப்பதெல்லாம் தவ்ஹீத் என்ற பெயரில் பகுத்தறிவு மசாலா கலந்த புதிய மார்க்கத்தைத் தான். 

இவர்கள் போதிக்கும் இந்த புதிய அனுகுமுறை, நவீன சிந்தனைகளான பெண்ணுரிமை, பகுத்தறிவு, தர்க்கம், 
தத்துவம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் ஆகியவையால் உந்தப்பட்டவை. இவர்கள் இஸ்லாத்தை நவீன 
சிந்தனைகளுக்கு ஏற்ற மார்க்கமாக மாற்றத் துடிக்கின்றனர். அதே கண்ணோட்டத்துடன் குர்ஆனையும் சுன்னாவையும் அனுகினர். தங்கள் புத்தியையே மார்க்கமாகக் கண்டனர்.

இவர்கள் குர்ஆனை விருப்பம்போல் விளங்கிக் கொள்ளலாம் என்றுக் கூறி விட்டனர். அந்த விளக்கம் 
ஸஹாபாக்களுடைய ஏகோபித்த விளக்கத்திற்கு முரணாக இருந்தாலும் அதைச் சரி காண்கின்றனர் இந்த சண்டாளர்கள்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "ஸஹாபாக்களும் மனிதர்கள் தான். அவர்கள் காலத்தில் நவீன வசதிகள் எல்லாம் இல்லை. எனவே அவர்களைக் காட்டிலும் நாம் நல்ல முறையில் குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க இயலும்". எனவே இவர்கள் குர்ஆனில் தம்முடைய மனோஇச்சையை மார்க்கமாகக் கண்டனர். அதையே குர்ஆனின் விளக்கம் என்றும் கூறினர். ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்களும் தவறாக விளங்கிக் கொண்டதைத் தாங்கள் தான் சரியாக விளங்கினோம் என்று வாதிட்டனர்.

ஸஹீஹான ஹதீஸ்கள் சில குர்ஆனுக்கு முரண்படுகின்றன எனக் கூறி அவற்றை நிராகரித்தனர். உண்மையில் அவை அவர்களின் வழிகெட்ட புத்திக்கு தான் முரண்பட்டன, குர்ஆனுக்கு அல்ல. இவர்களின் வழி வருவோர் இன்னும் பல ஹதீஸ்களை இதே காரணத்தைச் சொல்லி நிராகரிப்பர் என்பது திண்ணம்.

குர்ஆனை அவரவர் தம்முடைய அறிவைப் பயன்படுத்தி விளங்கலாம் என்றால், 'அல்லாஹ்வுடன் மற்ற 
கடவுளரையும் சேர்த்து வணங்குவதற்கும்' அல்லது 'அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும்' கூட இவர்களின் கொள்கை வழித்தோன்றல்கள் குர்ஆனிலிருந்தே ஆதாரம் காட்டுவர் என்பது என் எண்ணம்.(அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக) அப்பொழுதும் கூட "ஸஹாபாக்கள் எல்லாம் இதை தவறாக விளங்கி விட்டனர், நாங்கள் தான் சரியாக விளங்குகிறோம்" எனக் கூறுவர்.

தாங்கள் ஊறிய தமிழக திராவிட அரசியலின் தாக்கத்தால் ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டனர். இழிவான நாற்றமெடுக்கும் வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினர். இதற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரம் இருப்பதாக அபாண்டம் கற்பித்தனர்.

அல்லாஹ் இந்த வழிகெட்ட பகுத்தறிவு வாதிகளிடமிருந்து நம்மைக் காப்பற்றுவானாக!

Saturday, July 3, 2010

யூத நாட்டை இஸ்ராயில் எனப் பெயர் சூட்டி அழைப்பது சம்பந்தமாக

கேள்வி:
தீமை நிறைந்த நிராகரிக்கும் யூத நாட்டை'இஸ்ராயில்' என்று சொல்வதும் இந்த பெயரை வைத்து அந்த நாட்டை தரம் தாழ்த்தி பலி சொல்வதும் ஆகுமானதா ?

பதில்:
இது ஆகுமானது இல்லை என்பதுதான் சரியானது. யூதர்கள் ஒரு பெரிய சதியை செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் இடங்களில் அவர்களுக்கு (நமது நபியின் பெயரான) இஸ்ராயில் என்ற பெயரில் நாடு அமைக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணம் கொண்டுள்ளார்கள். இந்த சதியில் முஸ்லிம்களும் வீழ்ந்துள்ளார்கள். 'இஸ்ராயீல்' என்ற வார்த்தையை முஸ்லிம்கள் எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் உபயோகிக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் 'இஸ்ராயில்' என்ற வார்த்தையை தரம்தாழ்த்தி சாபமிடக்கூடச் செய்கிறார்கள்..

அல்லாஹ் தன் குர்ஆனில் யூதர்களை சபித்துள்ளான். 'அல் யஹூத்' என்றும், 'பனி இஸ்ராயிலில் நிராகரித்தவர்' என்றும்தான் அவர்களை சபிக்கிறான். 'இஸ்ராயில்' என்று உத்தம நபி யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரில் அவர்களை கேவலப்படுத்தவில்லை. யூதர்களுக்கும் நபிமார்களான யாக்கூப் மற்றும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கும் எந்த மார்க்க உறவும் இல்லை. அந்த நபிமார்களின் மார்க்கத்தின் உரிமை ஈமான் கொண்டவர்களான நம் முஸ்லிம் சமுதயாத்திற்க்குத்தான் உள்ளது.

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். (அல் குர்'ஆன் 3:68) 

ஷைக் ரபீய் பின் ஹாதி அல் மத்கலீ 
Check with Article ID: CAF030001

குறிப்பு :
அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளான இந்த தீமையான நாட்டுக்கு 'இஸ்ராயில்' என்ற புனித நபியின் பெயரைச் சூட்டி அழைப்பது மட்டுமல்லாமல் 'பயங்கரவாதி இஸ்ராயில்', 'தீமையான இஸ்ராயில்', 'மனித விரோதி இஸ்ராயில்' என்று நமது நபியை மறைமுகமாக நாமே தரம் தாழ்த்துவது தவறாகும். யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்று உயிரோடு இருந்தால் இப்படிச் சொல்வதை அவர்கள் விரும்புவார்களா என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வது அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்குமா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கும் அவனுடைய பொறுத்தத்திற்கும் தகுதியான விதத்தில் வாழ அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

ஆக்கம்: மஸூத் பின் அஹமத்

Sunday, June 27, 2010

பர்ளு தொழுகைகளுக்குப் பின் ஓத வேண்டிய சுன்னத்தான திக்ருகள்

     ஐவேளை பர்ளு தொழுகைகளுக்குப் பின்

 

1) اََََسْتََغْفِِرُ اللهَ

(3 முறை)

அல்லாஹ்விடம்  நான் பிழை பொறுக்கத் தேடுகிறேன்

--------------------------------------------------------------------------

2) اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ, وَمِنْكَ السَّلاَمُ, تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإكْرَامِ.

(1 முறை)

 

யா அல்லாஹ்! நீ சாந்தி மயமானவன். உன்னிடமிருந்தே சாந்தி உண்டாகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன்.

 

                

 

3) لاَ إلَهَ إلاّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ

 لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

 (1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

 

குறிப்பு: ஸுபுஹ் மற்றும் மஃரிபு தொழுகைகளில் மட்டும் وَلَهُ الْحَمْدُ க்குப் பின் يُحْيِيْ وَ يُمِيْتُ என்று சேர்த்து

 

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَ يُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

 

 என 10 முறை ஓதவும்.

 

 

4) اَللَّهُمَّ لاَ مانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِماَ مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

(1 முறை)

 

யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்கமாட்டாது.

--------------------------------------------------------------------------

5) اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِباَدَتِكَ

(1 முறை)

 

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!

 

--------------------------------------------------------------------------

6) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ  وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

(1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

. ------------------------------------------------------------------------

7) لاَحَوْلَ وَلاَ  قُوَّةَ إلاَّ بِاللهِ

(1 முறை)

தீமையை விட்டு விலகுவதற்கு வலிமையும் நன்மையை செய்வதற்கு ஆற்றலும் அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை.

--------------------------------------------------------------------------

8) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِياَّهُ لَهُ النِّعْمَةَ وَلَهُ الْفَضْلُ

وَلَهُ الثَّناَءُ الْحَسَنُ

(1 முறை)

வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவனையன்றி வேறு யாரையும் நாம் வணங்கவில்லை.எல்லா அருட்கொடைகளும், பாக்கியங்களும், அழகிய புகழ்ச்சிகளும் அவனுக்கே உரியன.

 

 

 

 

9) لاَإِلَهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنُ وَلَوْ كَرِهَ الْكاَفِرُوْنَ.

(1 முறை)

வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. நாம் நம்முடைய தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிவிட்டோம். அது நிராகரிப்போருக்கு வெறுப்பாக இருந்தாலும் சரியே.

 

10)

سُبْحَانَ الله  (அல்லாஹ் மிகத் தூமையானவன்)-33 முறை

 

 

11)

اَلْحَمْدُ لِلَّه (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)-33 முறை

12)

اَللهُ أَكْبَر (அல்லாஹ் மிகப் பெரியவன்)-33 முறை

 

13) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

(1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

--------------------------------------------------------------------------

14) آيَةُ الْكُرْسِيِّ

(1 முறை)

--------------------------------------------------------------------------

15)

சூரா இஹ்லாஸ்(قُلْ هُوَ اللهُ أَحَدُ சூரா)-1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

 

--------------------------------------------------------------------------

16)

சூரா ஃபலக்(قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَق சூரா) - 1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

--------------------------------------------------------------------------

17)

சூரா நாஸ்(قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ சூரா) - 1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

--------------------------------------------------------------------------

Saturday, June 26, 2010

குர் ஆனையும் சுன்னாவையும் தன்னுடைய தர்க்க வாதப்போக்கின் மூலம் பீ.ஜே வியாக்கியானம் செய்வதற்கு ஓர் உதாரனம்

பீ ஜேயின் விளக்கம்:

ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது. 

இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இவ்வுண்மையை அறிந்து வைத்துள்ளனர். 
இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்கள் சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன. 
இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நடந்துக் கொண்டார்கள். அக்காவையும் தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின் படியே மணந்துக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று தடை வரும் வரை இந்த நிலை நிலவியது. 

ஆரம்ப காலத்தில் போதை பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தை தொடர்ந்தார்கள். போதை பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது. இது போல திருமணத்தின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் இறைவனால் வகுக்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வரும் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர். 

இதன் பின்னர் சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டுவிட்டது. 

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. 
(அல்குர்ஆன் 2:228) 
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. 
(அல்குர்ஆன் 4:19) 
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். 
(அல்குர்ஆன் 4:21) 
கண்ணிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் அவளின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது நபிமொழி, 
நூல் : முஸ்லிம் (2545) 

திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் அறிவிக்கின்றன. 

ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும். ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது. திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன?, அதன் கடமைகள் என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?. 

எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்

 
நமது பதில்:

நபியவர்கள் என்னை 6வயதில் மணமுடித்தார்கள்.9 வயதில் என்னுடன் குடும்ப உறவில் ஈடுபட்டார்கள் (அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா;முஸ்லிம்:3544)

மேலுள்ள ஹதீஸ் பருவயதிற்கு முன்னர் சிறிய வயதிலேயே ஒப்பந்தம் செய்யலாம் என்பதையும் உறவுக்குத் தகுதியான வயதையடைந்தவுடன் (பருவம் அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை) குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

நபியவர்கள் ஜாஹிலியாக்கால வழமையின் அடிப்படையில் இதனைச் செய்யவில்லை.மார்க்க ரீதியான அனுமதி இருப்பதினாலேயே அவ்வாறு மணமுடித்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது:

நபியவர்கள் ஆயிஷாலை மணம் பேசினார்கள் 'நான் உங்களது சகோதரனல்லவா' என்று அபூபக்ர் சொன்னார்கள் அதற்கு நபியவர்கள் :'எனக்கும் உங்களுக்கும் உள்ள சகோதரத்துவம் மார்க்க ரீதியானது அவள் எனக்கு அனுமதிக்கப்பட்டவள்தான் என்றார்கள்(புகாரி:4793)

வஹீயின் அங்கீகாரத்தின்படியே இத்திருமணம் நடந்தது என்பதை பின்வரும் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

ஆயிஷாவே கனவில் நீ மூன்று முறை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டாய்.ஒரு பட்டாடைத் துணியொன்றால் உன்னை போர்த்தியவன்னம் ஒரு மலக்கு என்னிடத்தில் காண்பிப்பார்.திறையை நீக்கிப்பார்த்தால் உன் முகம் தெரியும்.அப்பொழுதெல்லாம் 'இது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியென்றால் அவன் அதனை நடத்திவைப்பான்' என்று சொல்லிக் கொள்வேன்.என்று நபியவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள்.(முஸ்லிம்:6436)

இதனால்தான் அல்குர்ஆனும் பருவயதடையாத பெண்கள் தலாக் சொல்லப்பட்டால் அவர்களது இத்தா கால எல்லை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

மாதவிடாய்க் காலத்தைக் கடந்த வயதிலுள்ள பெண்ளதும் இதுவரை மாதவிடாய் வராத பெண்களதும் இத்தாக்கால எல்லை மூன்று மாதங்களாகும் (அல் குர்ஆன் 65:4)

மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் சிறியவயதில் திருமண ஒப்பந்தத்தையும் உடல் தகுதி (உடல் தகுதி தானே தவிர பருவம் அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை) பெறும் வயதில் குடும்ப உறவையும் அனுமதிப்பதையும் காணலாம்.

திருமண பந்தத்தில் இணையவிருப்பது ""சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களது பொறுப்பாளிகளே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்"" என்ற செய்தி தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரழியல்லாஹு) உள்ளிட்ட ஸஹாபாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதுவே ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் இமாம்கள் அனைவரின் ஏகோபித்த கருத்துமாகும (இஜ்மஃ). இந்த விஷயத்தில் யாரிடமும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, நவீனவாத சிந்தனைத்தாக்கம் உடைய நவீனவாதிகளைத் தவிர.

மேலும் இளவயது திருமணத்திற்கு எதிரான சிந்தனை போக்கு கி.பி 18ம் நூற்றாண்டு வரை அறவே மக்களிடம் இல்லை. 

மேற்கத்திய சிந்தனைகள் உலகிற்கு பெண்ணுரிமை என்ற பெயரில் பரவிய போது தான் இள வயது திருமணங்களை மக்கள் ஏதோ ஒரு கெட்டக் காரியம் போலவும் மனித உரிமை மீறல் போலவும் கருதலாயினர்.  அதுவரை உலகின் எல்லா சமுதாயங்களிலும் இத்தகைய திருமணங்கள் நீக்கமற நிறைந்திருந்ததை வரலாற்றை உன்னிப்பாக படிப்போர் அறிந்திருக்கலாம்.

 இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதயாத்தாலும் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயத்தை இந்த மனிதர் (பீ.ஜே) ஹராம் ஆக்குகிறார். அதற்கு ஆதாரமாக குர்ஆனை  குர்ஆனுடன் மோத விடுகிறார்.

அதாவது ஸஹாபாக்களும் பின் வந்த தாபியீன்களும் அறிஞர்களும் இவர் காட்டும் வசனங்களையும் ஆதாரங்களையும் தவறாக புரிந்து கொண்டது போலவும், 1000 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்தான் சரியாக புரிந்து கொண்டது போலவும் இவரின் கூற்று உள்ளது. உண்மை என்னவென்றால் இத்தகைய திருமணங்கள் எல்லாம் தற்போது உள்ள நவீன சிந்தனைக்கு எதிரானது என்பதால், நடைமுறையில் உள்ள நவீன சிந்தனைகளுக்கு ஆதரவாக பீ ஜே அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் அனுகுகிறார் . இவர் தனக்கு வேண்டியது போல் குர்ஆன் வசனங்களை வளைக்கிறார். ஏன்னினில் இவர்களை பொறுத்த வரை அழைப்பு பணி செய்வதற்கு இஸ்லாத்தை நவீன மார்க்கமாக காட்ட வேண்டியதிருக்கிறது.

இந்த ஒரு விஷயமே அறிவுள்ள மக்களுக்கு பீ ஜேயின் வழிகேட்டை விளக்குவதற்கு போதுமானது.

Wednesday, June 23, 2010

விவாதம் செய்வது ஹராமா? பி.ஜெ.!


பி.ஜெ. யிடம் கேள்வி : நீங்கள் பலருடன் விவாதம் செய்துள்ளீர்கள். உதாரணம்: கிருஸ்தவர்கள், காதியானிகள், ஜமாலி, முஜிப் போன்றோர்.

விவாதம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது மாற்றுக் கருத்துடைய இரு தரப்பினர் மக்கள் முன்னிலையில் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பர். இறுதியில் அவர்களின் வாதங்களின் அடிப்படையில் இந்த கருத்து தான் சரியானது என்று முடிவு செய்யப்படும். சுருக்கமாக வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பட்டிமன்றம் எனக் கூறலாம்.

நான் அறிந்த வரையில் இத்தகைய விவாதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமோ சஹாபாக்களோ பங்கெடுத்ததில்லை.இன்னும் சொல்லப்போனால் இன்றைய நாட்களை போல் நபி அவர்களின் காலத்திலும் மாற்றுக் கருத்துடையவர்களும் பொய்யர்களும் நிறையவே இருந்தனர்.அப்படியிருந்தும் நபி அவர்கள் யாருக்கும் விவாத அழைப்பு விடுத்ததாக நான் அறியவில்லை.

உதாரணமாக நபி அவர்களின் காலத்தில் தன்னையும் நபி என சொல்லிய முசைலமாவை நபி அவர்கள் விவாததிற்கு அழைக்கவில்லை.

நபிமார்கள் செய்ததெல்லாம் சத்தியத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து சொல்லியது தான். எந்த நபியும் நீங்கள் இப்போது செய்வது போல் விவாதம் செய்ததாக நான் அறியவில்லை.மக்கள் முன்னிலையில் உண்மையை உரக்கக் கூறினார்களே தவிர விவாத அழைப்பு விடுக்கவில்லை.

மேலும், இத்தகைய விவாதங்களில் உண்மை தான் எப்பொதும் வெல்லும் என்றில்லை. பல சமயங்களில் விவாததில் பங்கெடுப்போரின் வாதத்திறமையின் அடிப்படையில் பொய்யைக் கூட உண்மை என மக்களை ஏமாற்ற முடியும். இன்னும் சில சந்தர்ப்பங்களில் விவாதத்தில் பங்கெடுத்த இரு தரப்பும் தாங்கள் தான் வென்றதாக உரிமை கொண்டாடுவதையும் காண முடிகிறது. உதாரணமாக நீங்கள் ஜமாலி மற்றும் முஜிபுடன் செய்த விவாதங்களை குறிப்பிடலாம்.

எல்லாவறிற்கும் மேலாக, இத்தகைய விவாதங்களை சுன்னாவில் நம்மால் காண இயலவில்லை. நான் அறிந்தவரையில் இத்தகைய விவாதங்கள் மேற்கத்திய மற்றும் இணைவைப்போரின் கலாச்சாரமாகவே இருந்து வந்துள்ளது (Rational theology/Natural theology). சிலப்பதிகாரத்தில் கூட பட்டிமன்றங்கள் பற்றிய குறிப்பை படித்ததாக ஞாபகம்.

இத்தகைய விவாதங்களை ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் நம்மால் காண இயலாது. இத்தகைய விவாதங்களில் மார்க்கத்தின் பெயரால் ஈடுபட்டவர்கள் முஃதஜிலாக்களே.இல்முல் கலம் என்ற பெயரில் விவாதங்கள் மூலம் மார்க்கத்தை நிறுவுவது முஃதஜிலாக்களின் வழிமுறையாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் தர்க்க வாதங்களின் (Philosophy/logic) மூலம் தமது கருத்தை நிலைநாட்டுவர்.

இதனாலேயே அறிஞர்கள் இத்தகைய விவாதங்களை ஹராம் என தீர்ப்பளித்துள்ளனர். இல்முல் கலம் ஒரு தவறான வழிமுறையாகவே இஸ்லாமிய அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்டு வந்துள்ளது.

என்னுடைய கேள்வி நீங்கள் இத்தகைய விவாதங்கள் புரிவது சரிதான் என கூறுகிறீர்களா? அவ்வாறெனில் உங்கள் கூற்றுக்கு ஆதாரம் என்ன? 
 அஹ்மத் பிர்தௌஸ் 

பி.ஜெ பதிலலித்திருந்தார்.அந்த பதிலையே நாமும் பிரசுரிக்கிறோம். 
இன்ஷா
 அல்லாஹ் இ‌து பி.ஜேயின்  மடத்தனமான வாதத்தையும்,ஊடகத்துக்கும்  நபி வழிக்கும் வித்தியாசம் தெரியாமல் உதாரம் கூ‌றிதடுமாறுவதையும் டுத்துக்காட்டும்....   >>>-- 

பி.ஜெ பதில்  >>  உங்களுக்குp பதில் சொல்வதற்கு முன்னால் உங்களை நோக்கிs சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது
நீங்கள் இப்போது மின்னஞ்சல் வழியாக உங்கள் மறுப்பைப் பதிவு செய்துள்ளீர்கள். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்தார்களா?
அல்லது வேறு வகையில் தமது மறுப்பை முஸைலமா உள்ளிட்டவர்களுக்கு எழுதி அனுப்பினார்களா?
இஸ்லாத்தின் பால் சில மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்களே தவிர வழி கெட்ட கொள்கைகளின் தலைவர்களுக்கு எந்தக் கடித்த்தையும் எழுதவில்லை. இதன் படி நபிவழியில் இல்லாத ஒரு முறையைக் கையாண்டு நீங்கள் ஏன் எமக்கு எழுத வேண்டும்?
விவாதத்துக்கு அனுமதி இல்லை என்று நீங்கள் எழுதியதும் வாதம் தானே? விவாதம் தானே? 
உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் அவர்கள் பாட்டுக்கு எதையோ சொல்லி விட்டுப் போகட்டும் என்று இருக்க வேண்டுமே தவிர நபியவர்கள் காட்டாத வழியில் நீங்கள் ஏன் உங்கள் மறுப்பைத் தெரிவிக்க வேண்டும்? 
இது குறித்து உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்து ஏன் விவாதம் செய்ய வேண்டும்?
இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில் ஏதாவது இருந்தால் அது எமது சார்பில் நீங்கள் அளித்துக் கொள்ளும் பதிலாகத் தான் இருக்கும்..
பித்அத்தை நாம் எதிர்க்கும் போது அதற்குப் பதில் சொல்ல முடியாத பித்அத்வாதிகள் காரில் போவது பித்அத் இல்லையா? வாட்ச் கட்டுவது பித்அத் இல்லையா? என்று கேட்பார்கள். அந்தக் கேள்விக்கும் உங்கள் கேள்விக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
தொலைக் காட்சி மூலம் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். அது மட்டும் கூடுமா என்று நீங்கள் கேட்பீர்களா? 
பத்திரிகை நடத்தி தஃவா செய்யப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) எந்தப் பத்திரிகையின் எடிட்டராக இருந்தார்கள்?
ஸலபிய்யா உள்ளிட்ட மதரஸாக்கள் நடத்தப்பட்டு ஸலபி உள்ளிட்ட பட்டங்கள் அளிக்கப்படுகிறது அது கூடுமா என்று கேட்பீர்களா?
இப்போது காகிதத்தில் குர்ஆன் அச்சிடுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அச்சிடவில்லை. அதுவும் கூடாது என்பீர்களா?
பல மொழிகளில் குர்ஆனை மொழி பெயர்க்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) வாழும் போது ஏதாவது ஒரு மொழியிலாவது அவர்கள் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்தார்களா? எனவே குர்ஆனைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பது பாவம் என்று கூறி விடுவோமா?
பள்ளிவாசல் என்ற அமைப்புக்கு அனுமதி உண்டு. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிமெண்ட் இரும்பு போன்றவறைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. 
அப்படியானால் நாம் தற்போது கட்டும், கட்டிக் கொடுக்கும் பள்ளிவாசல்களும் கூட சரியான செயல் அல்ல என்று ஃபதவா கொடுப்பீர்களா?
வணக்க வழிபாடுகளுக்கு மட்டும் தான் நீங்கள் கூறுவது போல் பார்க்க வேண்டும். 
மற்ற விஷயங்களுக்கு அடிப்படையான் அனுமதி இருப்பதே போதுமாகும். 
பள்ளிவாசல் கட்ட அனுமதி உள்ளது. நாம் நம்முடைய காலத்தில் உள்ள வசதிகளைக் கொண்டு எப்படிக் கட்ட வேண்டுமோ அப்படிக் கட்டிக் கொண்டால் அது அந்த அனுமதியில் அடங்கியுள்ளது என்பது தான் பொருள்.
நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்ற பொதுவான அனுமதிக்குள் பத்திரிகை, துண்டுப் பிரசுரம், பொதுக் கூட்டம், தொலைக் காட்சி, இணைய தளம் உள்ளிட்ட நம் காலத்தில் உள்ள ஹலாலான முறைகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். அந்த அனுமதியில் இதுவும் அடங்கும்.
அது போல் விவாதம் நடத்த அனுமதி உண்டா என்று பார்க்க வேண்டும் அப்படி அனுமதி இருந்தால் அதுவே போதுமானது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 11:32
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 16:125
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! "எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!
திருக்குர்ஆன் 29:46
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 2:258
இப்ப்டி ஏராளமான் வசனங்கள் அழகிய முறையில் விவாதம் செய்யுமாறு கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்காத பல வசதிகளை நாம் பெற்றுள்ளோம். அதைப் பயன்படுத்தி நாம் விவாதம் செய்கிறோம்.
திருக்குர்ஆனின் பல வசனங்கள் நேருக்கு நேர் விவாத்ம் செய்யும் வைகயில் அமைந்திருப்பதைக் காணுங்கள்
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:23
அல்லாஹ்விடம் உள்ள மறுமை1 வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 2:94
யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (வேறு யாரும்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 2:111
தவ்ராத் அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யஃகூப்) தம் மீது தடை செய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தன. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!'' என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக!
திருக்குர்ஆன் 3:93
அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு இருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 3;168
எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடும் வரை எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்'' என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும், நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
திருக்குர்ஆன் 3:183
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
திருக்குர்ஆன் 7:194
இந்த வசனங்களில் அல்லாஹ் விவாதம் செய்வது உங்களுக்குத் தோன்றவில்லையா?
விவாதத்தின் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறீர்கள். வாதிப்பவரின் திறமையைப் பொறுத்து நல்ல கருத்துக்கள் கூட தோற்று விடும் என்று அற்புதமான வாதத்தை எடுத்து வைக்கிறீர்கள். இது கூட விவாதம் தான். 
இது விவாதத்துக்கு மட்டும் தான் பொருந்துமா? மேடையில் ஏறி மக்களுக்கு உரையாற்றுபவரிடம் தெளிவான ஞானம் இல்லாவிட்டால் சரியான கருத்து கூட மக்களிடம் எடுபடாமல் போய்விடும். இதற்காக மேடையில் ஏறிப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுவீர்களோ?
பிரசுரம் போடும் போது திறமை இல்லாமல் பிரசுரம் போட்டால் நல்ல கருத்து கூட தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வழி கேட்டுக்குத் தள்ளப்பட்டு விடும். எனவே அதுவும் கூடாது என்று கூறி விடுவோமா?
நீங்கள் இலங்கையைச் சேர்ந்த ஸலபி பட்டம் பெற்றவராக இருந்தால் கூடுதலாக இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டியுள்ளது.
உமர் அலி, கப்ரு வணங்கிகள் ஆகியோரிடம் உங்கள் ஸலபிகள் விவாதத்துக்கு ஒப்பந்தம் போட்டு என்னை தங்கள் சார்பில் விவாதிக்க அழைத்தனர். நானும் கலந்து கொண்டேன். அத்னால் பெரிய பயன் ஏற்பட்டதாக எழுதி பெருமைப்பட்டுக் கொண்டனர். இஸ்மாயீல் ஸலபியை விவாதத்துக்கு அழைத்த பிறகு தான் நீங்கள் எடுத்து வைத்த இதே வாதங்களை எடுத்து வைத்தனர்.

(நீங்கள் அந்த ஸலபியாக இல்லாவிட்டால் இந்தக் கடைசிப் பாரா உங்களுக்கு உரியது அல்ல.)
திறமையுடனும் தேவையான தயாரிப்புகளுடனும் அக்கறையுடனும் விவாதிக்க வேண்டும். இந்தத் தகுதி இல்லாதவர்கள் விவாதத்துக்கு அழைக்கக் கூடாது. மேடைகளில் ஏறக் கூடாது. எழுதக் கூடாது என்றால் அது பொருத்தமானதாக இருக்கும்.
விவாதம் நடந்த பின் நாங்கள் தான் வெற்றி அடைந்தோம் என்று ஒவ்வொரு தரப்பும் கூறிக் கொண்டாலும் மக்கள் தெளிவாக உள்ள்னர். ஒவ்வொரு விவாதத்துக்குப் பிறகும் நமது கொள்கை பெருமளவு வளர்ந்துள்ளதே இதற்குச் சாட்சியாக உள்ளது.

எமது பதில் >>

 

அபூ  அப்துர்ரஹ்மான் அஸ் ஸைலானியிடமிருந்து பீ. ஜைனுல் ஆப்தீனுக்கு

 

சகோதரர் அஹ்மத் பிர்தௌஸ் கேட்ட கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலை நான் படித்தேன். அந்த பதிலின்  சுருக்கத்தை உங்கள் வார்த்தையில் சொல்வது என்னவென்றால்
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்காத பல வசதிகளை நாம் பெற்றுள்ளோம். அதைப் பயன்படுத்தி நாம் விவாதம் செய்கிறோம்."

ref: உங்கள் மடலில் 2:258 ஆயத்துக்கு பின்னால் எழுதிய வார்த்தைகள்.

அல்லாஹ் நபிக்கு வழங்காத பல வசதிகளைப் பற்றி பேசுவதென்றால் அது உலக வசதிகளாகும். இதை பயன்படுத்துவதை எவரும் மறுக்குவுமில்லை. இதனால் எவரும் வழிகேடாவதுமில்லை. மாறாக அழப்புப்பணியில் நபி 
صلى الله عليه و اله و سلم‎ கையாலாத வழிமுறையை எவரெல்லாம் கையாள்கிறார்களோ அது வழிகேடாகும்.

அல்லாஹ் குர்ஆனில் நபிக்கு கூறியதாவது அழைப்புப் பனியை பற்றிக்கூறும் போது

நபியே நீர் கூறுவீ ராக இதுவே எனது நேரான வழியாகும். நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன் தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். அல்லாஹ் மிக பரிசுத்தமானவன் நான் அவனுக்கு இணை வைப்பவரில் உள்ளவனுமல்லன். (12:108) 

பீ. ஜேயும் அவரைப் போன்றவர்களையும் பற்றி எனது உபதேசம் என்னவென்றால். நபியை பின்பற்றுபவன் மேல் குறிப்பிட்ட ஆயத்தில் அழைப்புப்பணியின் சுருக்கத்தை பு
ரிந்துகொள்வான்.
அதாவது 

'நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம்."

மேற்குறிப்பிட்ட ஆயத்தின் அடிப்படையில்
முதலாவது பு
ரியவேன்டியது என்னவென்றால் நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்களின் அழைப்புப்பணியின் வழிமுறை தெளிவான ஆதரத்துடனே இருக்கிறது.

நபியை பின்பற்றுபவன் அதே வழியைப் பின்பற்றுவான்.
அல்லாஹ் 
ஸுப்ஹானஹவதஆலா இதைத் தான் அழைப்புப்பணியின் வழிமுறையென்று மக்களிடம் கூறுமாறு நபிக்கு ஏவுகின்றான்.
மேற்கூறிய ஆயத்தின் மூன்று விடயங்களையும் பற்றி நாம் கூறுவது என்னவென்றால் என் இஸ்லாமிய உள்ளங்களே!

அல்லாஹ் 
ஸுப்ஹானஹுதஆலா அவனுடைய குர்ஆனிலே எதை அழைப்புப்பணியென்று காட்டித்தந்திருக்கிறானோ அதை நாம் எல்லோரும் கன்டிப்பாக பின்பற்றுவது தான் நேர்வழியாகும்.
அதை விட்டுவிட்டு காலங்களையும் நேரங்களையும் சாட்டாகக் காட்டி தனக்கென்று ஒரு பாதையை உருவாக்குவது அல்லாஹ் எச்சரிக்கையாகக் கூறியவாறு 

அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன். நான் அவனுக்கு இணைவைப்பவரில் உள்ளவனுமல்லன். 
என்ற பாதையில் சிக்கிப்பட்டவனாகும். இதணை அல்லாஹ் இணைவைக்கின்ற வழிமுறையாக அ
றிவித்து விட்டான். 

எவ்வாறு அல்லாஹ்வைத்தவிர ஏனையவற்றை வணங்குவது இணைவைப்பதாகுமோ அதைபோல் அல்லாஹ் இறக்கிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மார்க்கத்தை பின்பற்றுவதும் இணைவைப்பதாகும். அவனுடைய மார்க்கத்தை பின்பற்றுவதில் ஒன்றுதான் அழைப்புப் பணியை சுமப்பதாகும். எவ்வாறு நபி 
صلى الله عليه و اله و سلم‎ அழைப்புப் பணியை சுமந்தாரோ அதைத்தவிர எவனும் அவனுக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்குவானாயின் அது புதிய ஒரு வழிமுறையை உருவாக்குவதாகும்.
வணக்கத்திலே நாம் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பது போலவே பின்பற்றுவதில் நாம் நபியை விடவும் எவரையும் முன்மாதிரியாக எடுக்க மாட்டோம்.eru நபி 
صلى الله عليه و اله و سلم‎ அவர்களின் காலத்தில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்காத வசதிகள் உலக ரீதியான வசதிகளாகுமே தவிர மார்க்கமென்ற விடயத்தில் நபிக்கு வழங்காததை அல்லாஹ் எனக்கு வழங்கி விட்டான் என்று சொல்வது குப்ர் ஆகும். ஏனென்றால் நபிக்குப் பின்னால் மார்க்க மென்பது வழங்கப்படமாட்டாது. வழங்கப்பட்ட மார்க்கத்தைத் தான் பின்பற்றுவதென்றால்

'தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப்பின்பற்றுபவரும் இருக்கிறோம்"
எனவே! பின்பற்றுபவன் உருவாக்குபவனல்ல,

பின்பற்றுவதென்றால் காலங்களையும் நேரங்களையும் சாட்டாகக் காட்டி எதை நபி 
صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் வழிகேடென்று தீர்ப்பு அளித்தாரோ அதை நேர்வழியென்று வாதாடுவது பின்பற்றுவதாகாது. மாறாக அது நபியிக்கு ஒரு மறுப்பாகும். அவன் புதிதாக ஒன்றை உருவாக்குபவனாகும். இதைப் பற்றி நான் உங்களுக்கு ஹிஜ்ரி 1424 ஷஃபான் 4 அன்று அனுப்பிய கடிதத்திலே தெளிவு காட்டினேன். நபியைப் பின்பற்றுபவரென்றால் அதுவே உங்களுக்குப் போதுமானதாகும் என்றாலும் வாதத்தையும் தர்க்கத்தையும் எவரெல்லாம் அவனுக்காக வழிமுறையாக்கிக் கொள்கிறார்களே அவர்களுக்கு நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்களின் பொன் மொழிகள் தெளிவைக் காட்டாது. இதனையும் அதே கடிதத்தில் நான் உங்களுக்கு தெளிவு படுத்தியிருக்கின்றேன். அதை மீண்டும் இங்கும் நினைவுக் காட்டுகின்றேன். விவாதம் செய்வது கூடாது என்பது தொடர்பாக கீழ்வரும் நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்களது ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.

நபி  صلى الله عليه و اله و سلم‎ கூறியதாக அபூ உமாம  அவர்கள் அறிவிக்கிறார்கள்

'நேர் வழியிலுள்ள ஒரு சமூகம் தர்க்கத்தை பெற்றேயன்றி வழிகெடுவதில்லை" என்று நபி 
صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறிவிட்டு கீழ் வரும் குர்ஆன் வசனத்தை ஒதிக் காட்டினார்கள். 

'தர்க்கத்துக்காகவே தவிர உம்மிடம் அவர்கள் அதை உதாரனமாக கூறவில்லை"


இந்த விடயம் தொடர்பாக இமாம் இப்னு ரஜப் கூறுகிறார்கள


ஹலாலான ஹராமான விஷயங்களில் தர்க்கம், வாதம், தான் பாரட்டப்படவேண்டும் என்பதற்காக காட்டிக்கொள்வது போன்றவைகளை ஸலப் இமாம்கள் மறுத்துள்ளார்கள் இது இஸ்லாமிய இமாம்களின் வழிமுறையாக இருந்ததில்லை 

 

இமாம் மஃரூப் அல் குர்ஹி கூறுகிறார்கள்:

'அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடினால் அவனக்கு தர்க்கத்தின் வழிகளை மூடிவிட்டு நற்கருமங்களுக்கான வழிகளை திறந்து கொடுக்கிறான். அல்லாஹ் ஒரு மனிதனுக்கு தீமையை நாடினால் நற்கருமங்களுக்கான வழிகளை அவனுக்கு மூடிவிட்டு தர்க்கத்துக்கான வழிகளை அவனுக்கு திறந்து கொடுக்கிறான்." 

 

நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறியதாக ஸைத் பின் அர்கம்  அவர்கள் அறிவிக்கிறார்கள்

'இறைவா பயனில்லாத கல்வியை விட்டும், அச்சமில்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக்கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."
(முஸ்லிம், திருமிதி, நஸாயி - பார்க்க ஸஹீஹ் அத் தர்கீப் அத் தர்ஹீப் பக்கம் 142 ஹதீஸ் 119)

இந்த விடயத்தைப் பற்றி இமாம் இப்னு ரஜப் கூறுகிறார்

மிகவும் பயனுள்ள அறிவு கொடுக்கப்பட்டு அவ்வறிவால் பயன்பெறாத ஒரு சமூகத்தைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கிறான் அதனைச் சுமப்பவனுக்கு அது பயனளிக்கவில்லை.  

 

உங்கள் மடலில் நீங்கள் கூறியிருப்பதாவது

'நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டுமென்ற பொதுவான அனுமதிக்குள் பத்திரிகை, துண்டுப் பிரசுரம், பொதுக்கூட்டம், தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட நம் காலத்திலுள்ள ஹலாலான முறைகள் அனைத்தையும் பயன்படுத்தலாம் அந்த அனுமதியில் இதுவும் அடங்கும்"

 'நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டுமென்ற பொதுவான அனுமதி...." உலகவிடயமென்றால் நிச்சயமாக ஏற்றுக்கொள்வோம். என்றாலும் மார்க்க வழிமுறைக்கு பொது அனுமதி என்பதற்கு என்ன ஆதாரம்?
மாறாக முன்னர் கூறிய குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நபி வழி மட்டுமே அழைப்புப் பணியின் வழிமுறையென்று அல்லாஹ்வே கூறுகின்றான்.
அழைப்புப் பணியில் பத்திரிகை, துண்டுப் பிரசுரம், பொதுக்கூட்டம், தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட உலக விடயங்களில் அல்லாஹ்வின் ஷரிஅத்தில் தடை செய்யப்படாதவற்றை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டது என்ற காரணத்தினால் அழைப்புப் பணியின் வழிமுறையான ஏவல், எச்சரிக்கை, சிறப்பு, தடை, கடமை போன்ற மார்க்க ரீதியான அம்சங்களையும் நமக்குத் தேவைப் போன்று கையாள முடியுமா? அதிலும் குறிப்பாக எதனை நபி 
صلى الله عليه و اله و سلم‎ வழிகேடென்று சென்னது மட்டுமல்லாமல் நேர் வழியில் இருக்கும் ஒரு கூட்டம் வழி தவறாது தர்க்கத்தினாலேயன்றி என்று கண்டிப்பாக எச்சரிக்கை செய்த ஒன்றை நாம் வழிமுறையாக்கி விட்டோமென்றால் இன்னும் அதனையே அழைப்புப் பணியின் வழிமுறையாகவும் ஆக்கிவிட்டோமென்றால் அது எம்மை வழிகேட்டின் உச்சிக்கே கொண்டு சேர்த்து விடும் என்பதில் என்ன சந்தேகம்?

உங்கள் இந்த வழிகேட்டை நான் புரிந்த காரணத்தினால்தான் உங்களுக்கு நேர் வழியின் வெளிச்சத்தைக் காட்டுவதற்கு எனது உதவியாக சில அடிப்படைகளை நீங்கள் மீண்டும் தேடிப் படிப்பீர்கள் என்பதற்காகவே எனது மடலில் நான்கு கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்த்தேன்.
ஒரு வழிகேட்டின் வேரில் வளர்ந்த மரத்தின் கிளைகளுக்கு மறுப்பளித்து அதனை திருத்தி விடமுடியாது. மாறாக அதன் வேரைத் திருத்தி விட்டால் அதன் கிளைகளையும் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் உங்களுக்கு அந்த நான்கு கேள்விகளை முன்வைத்தேன் அதாவது

அல்லாஹ் என்பதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன?

அல் குர்ஆனை விளங்கும் முறை என்ன?

ஸுன்னா என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? அதை எப்படி உறுதிப்படுத்துவது?

ஸுன்னாவை விளங்கும் முறை என்ன?

இந்த நான்கு கேள்விகளுக்கும் 7வருடகாலமாக உங்கள் பதிலை எதிர்பார்த்து இருக்கின்றேன். ஆனால் உங்களது நேரடி பதில் இதுவரை வந்ததாக தெரியவில்லை. என்றாளும் உங்கள் போராட்டத்தில் 
(இதனை நான் அழைப்புப் பணியென்று கருதமாட்டேன் - இன்னும் முக்கியமாக இஸ்லாமிய அழைப்புப் பணியென்றும் கருதமாட்டேன்.) உங்கள் போராட்டத்தில் ஏழு வருடங்களாக நான் அனுபவித்தது என்னவென்றால் வழிகேட்டிலிருந்து நீங்கள் தப்ப முடியாமல் மேலும் சிக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். ஆரம்ப காலத்தில் உங்களை நான் ஒரு குர்ஆனையும்ஸுன்னாவையும் பின்பற்றுபவன் என்று கருதினேன் இன்னும் ஏகத்துவக் கொள்கையை சுமந்தவன் என்று தான் நம்பினேன். அதனால் தான் ஹிஜ்ரி 1422 ரபியுல் ஆகிர் மாதம் 29ம் திகதி எழுதிய மடலில கூறினேன்.

'ஸ்ரீ லங்கா நாட்டிற்கு வருகை தந்த உங்களை வருகவென்று வரவேற்கின்றோம். தஃவா சம்பந்தமான இந்த பிரயாணத்தில் நீங்கள் மேற் கொள்ளும் ஒவ்வொரு விடயத்திலும் அல்லாஹ் அபிவிருத்தி செய்ய வேண்டுகிறோம். இலங்கை இந்திய போன்ற இடங்களில் முஸ்லீம்கள் மத்தியில் தௌஹீத் எனும் கொடியை உயர்த்திட நீங்கள் மேற்கொள்ளும் சிறந்த பணிக்காக உங்களுக்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் எப்போதும் ஷைத்தானின் சுழ்ச்சியிலிருந்து உங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!"

என்றாலும் இப்பொழுது அன்றைய தினம் அனுப்பிய கடிதத்தை பார்க்கும் போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கின்றேன். உங்கள் இந்த 7வருடத்தில் நீங்கள் குர்ஆன்
ஸுன்னா பின்பற்றுபவரல்ல குழப்புகின்றவரென்று நிறுபித்துவிட்டீர்கள். மேலும் குர்ஆன் எதற்காக இறக்கப்பட்டிருக்கின்றதோ அதற்காக பாவிக்கின்றவரல்ல மாறாக தனக்காக குர்ஆனை வளைத்து எடுப்பவராகவே அனுபவித்துள்ளேன். இந்தத் தீர்ப்பை நான் உங்களுக்காகத் தரும் ஆதாரங்களில் ஒரு ஆதாரம் சகோதரர் அஹ்மத் பிர்தௌஸின் இந்தக் கடிதத்தில் நீங்கள் பாவிக்கும் அனைத்து குர்ஆன் வசனங்களும் அவை 11:32, 16:165, 29:46, 2:258, 2:23, 2:24, 2:111, 3:93, 3:168, 3:183, 7:194 என்ற அனைத்தும் ஆயத்துக்களையும் படிக்காமலும் விளங்காமலும் தனக்குத் தேவையானமாதிரி குர்ஆனை வலைப்பவர் என்பதற்க்கு ஆதாரமாகும்.

 இவற்றின் சுருக்கமான பதில் ஒன்றோ காபிர்கள் அன்பியாக்கலைப் பார்த்து நீங்கள் வாதாடினீர்கள் என்று சொன்னதோ அல்லது அல்லாஹ் சுபஹானஹவ தஆலா காபிருக்கு ம
றுப்பாக அழைத்ததோ அல்லது காபிர்கள் விதண்டாவாதத்துடன் நடந்து கொண்டதோ ஆகும். இவைகள் உதாரணங்களைத் தவிர விவாதத்துக்கு என்று ஆதாரம் கிடையாது.

 நீங்கள் கூறியபடி இந்த ஆயத்துக்கள் விவாதத்துக்கு ஆதாரமென்றால் நபியே இந்த ஆயத்தை நிலைநாட்டாதவர் என்று கூறவேண்டும் அல்லது நீங்கள் நபியை பார்க்க சிறப்பான பாதையை அடைந்தவர் என்று கூறவேண்டும் இதுவே ஒரு குப்ர் ஆகும்.

நாம் நபி 
صلى الله عليه و اله و سلم‎ வழியை போதுமாக எம்வழியாக எடுத்த காரணத்தினால் இவ்வாறு இந்த ஆயத்துக்களை விளங்கமாட்டோம் மாறாக எவ்வாறு அல்லாஹ{ஸுப்ஹானஹவ தஆலா இந்த ஆயத்துக்களை இறக்கினானோ அவ்வாறு நாமும் கருதுகிறோம். இன்னும் எவ்வாறு நபி صلى الله عليه و اله و سلم‎ அவரின் அழைப்புப் பணியை கையாண்டாரோ அவ்வாறே நாமும் கையாள்வோம். எவற்றை அல்லாஹ்வும் அவனதுதூதரும் மறுத்ததோ அவற்றை நாமும் மறுப்போம்.

தர்க்கம்


தர்க்கத்தை நபி 
صلى الله عليه و اله و سلم‎ அவர்களே வழிகேடு என்று சொன்ன பின்னால் இன்னும் அது மட்டுமல்ல, நேர் வழியில் இருக்கின்ற ஒரு கூட்டம் தர்க்கத்திற்கு ஆளாகிவிட்டதென்றால் அதுவும் வழிகேடாகும். நாம் ஒரு காலமும் தர்க்கத்தை அழைப்புப் பணியில் கையாளமாட்டோம். தர்க்கத்தின் அடிப்படையான வழிமுறையில் ஒன்றுதான் சொன்னதை சொன்னமாதிரி எடுக்காமல் தன் தேவைக்கேற்ப சுமப்பது.
வழிகேடுகளை உங்களுக்கு உரித்தாக்கிக் கொண்ட காரணத்தினால் நீங்கள் தர்க்கத்தை உங்களது பாதையாக ஆக்கிக்கொண்டீர்கள். ஆகவே குர்ஆனையும், 
ஸுன்னாவையும் பார்த்தே நீங்கள் வழிகேடாகின்றீர்கள். அல்லாஹ்வும் நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்களும் தடுத்ததை நாங்கள் தடுத்துக் கொள்ளவில்லையென்றால் எப்படி நாங்கள் நேர்வழியை அடையமுடியும்?
 தடுக்கப்பட்ட வழிமுறைகளை குர்ஆன் காட்டும் வழியென்று சொல்வது அல்லாஹ்வின் மேல் நீங்கள் சுமத்தும் ஒரு அபாண்டமாகும். நீங்கள் குர்ஆனைப் பார்த்தே வழிகேடாகின்றீர்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். இதற்காகவேதான் உங்களை இந்த வழிமுறையில் இருந்து திருத்த வேண்டுமென்ற நோக்கத்தில் ஹிஜ்ரி 1424 ஜமாதுஸ் சானி பிறை 14ம் திகதி நான் உங்களுக்கு எழுதிய மடலில் உங்களிடம் வினவப்பட்ட அந்த நான்கு கேள்விகளில் இரண்டாவது கேள்வியாக வினவிய 'குர்ஆனை விளங்கும் முறை என்ன?" என்பதாகும்.
அல்லாஹ் காபிர்களுக்கு கொடுத்த பதில்களை தர்க்கமென்று சொன்னால் அது தவறாகும் ஏனென்றால் தர்க்கமென்பதை மேலே குறிப்பிட்டது போன்று சொன்னதை சொன்னது போன்று சுமக்காமல் தனது தேவைக்கேற்ப சுமப்பதாகும். இது அல்லாஹ்வின் வழிமுறையல்ல. மாறாக இரட்சகன் எவனுக்கெல்லாம் மறுப்பாக பதிலளித்தானோ அவர்களை பற்றிய உண்மையை அல்லாஹ் நன்கு புரிந்தவனாக இருக்கிறான். அது மட்டுமல்ல அவர்களுக்கு தக்க பதில்களை கொடுத்தவனாக இருக்கிறான். இது அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த மறுப்பாகுமே தவிர தர்க்கமாகாது.
ஒருவர் நேர்வழியை அடைந்த பின்னால் சொன்னதை சொன்னது போன்று சுமக்காமல் தனக்குத் தேவைபோன்று சுமக்கும் தன்மையான தர்க்கம்தான் அவனை வழிகேடாக்குமென்பதில் சந்தேகம் கிடையாது.

அசத்தியத்தை மறுக்கும் உபதேசங்களையும், தெளிவு காட்டும் வார்த்தைகளையும், சத்தியத்தை நோக்கிய உதாரணங்களையும் தர்க்கமென்று சொல்வது ஒரு அபாண்டமாகும்.

அசத்தியத்தை மறுக்கும் உபதேசம்.

மார்க்கமென்பது ஒரு உபதேசமாகும் என்பது நபி வழியாகும். ஹதீஸ்

நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறியதாக அபி ருகைய்யா தமீம் பின் அவ்ஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்

'மார்க்கமென்பது ஒரு உபதேசமாகும், மார்க்கமென்பது ஒரு உபதேசமாகும், மார்க்கமென்பது ஒரு உபதேசமாகும். 'அல்லாஹ்வின் து}தரே எவருக்கு? என்று நாங்கள் கேட்டோம்." நபி 
صلى الله عليه و اله و سلم  அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வுக்காகவும், இன்னும் அவனுடைய வேதத்துக்காகவும், இன்னும் அவனுடைய து}தருக்காகவும், இன்னும் முஸ்லீம்களின் தலைவர்களுக்காகவும், இன்னும் முஸ்லீம் பொதுமக்களுக்காகவும் ஆகும்"  
(ஸஹீஹ் முஸ்லிம்)

தெளிவு காட்டும் வார்த்தைகள்

அல்லாஹ் 
ஸுப்ஹானஹு தஆலா பனி இஸ்ராயீல்களுக்கு எச்சரிக்கையாக சொன்னதை நினைவுகாட்டி உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால்.

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை மறைத்து விடாது ஜனங்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்;டும் என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை நபியே நீர் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக. பின்னர் அவர்கள் தங்களின் இவ்வுறுதி மொழியை தங்கள் முதுகுக்கு அப்பால் எறிந்து விட்டு இதற்க்குப்பிரதியாக சொற்பக் கிரயத்தை வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் இவ்வாறு வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   
                                     (ஆல இம்ராண் 3 :187)

என்ற ஆயத்தின் அடிப்படையில் நீங்கள் தவறாகக் கூறுகின்ற விடயங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும் என்ற காரணத்தினால் உங்களுக்கு இதனை எத்திவைக்கிறோம்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்

'தெளிவான அத்தாட்சிகளிருந்தும், நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கி வைத்துள்ளதை - அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (மனித இனம், ஜின், மளக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் அவர்களை சபிக்கின்றனர்.
                                                                                                      (பகரா 2 : 159 )

சத்தியத்தை நோக்கி உதாரணங்கள்

நேர்வழிக்கு உதாரணமாக நபிவழியை மட்டுமே நாம் சுமந்திருக்கிறோம். அதை நாம் எடுத்துக்காட்டும் போது உங்கள் தனிவழியை நிரூபிப்பதற்க்கு நீங்கள் முன்வருகிறீர்கள் இதுவே ஒரு வழிகேடாகும்.
உங்கள் வழிகேடுகளை புரியாமல் நாம் உபதேசம் செய்யவில்லை. அல்லது உங்கள் வார்த்தைகளை எமக்குத் தேவை போன்று சுமந்து மறுப்புக்களை முன்வைக்கவில்லை மாறாக உங்கள் தவறுகளையும், வழிகேடுகளையும், பித்அத்களையும், ஷிர்க்களையும், குப்ர்களையும் சரியாகவே அடையாளம்கண்டு அவற்றுக்கு தகுந்த மறுப்புகளை நாம்முன்வைத்து விட்டோம் இதனைப் பார்த்து நீங்கள் தர்க்கம் என்று சொன்னால் அது ஒரு அபாண்டமாகும்.

உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்ன வென்றால்
நான் கூறாததை எல்லாம் நான் கூறியதாக என்மீது சுமத்தும் அபாண்டங்களை இதன் பின்னர் நீங்கள் தவிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் ஹிஜ்ரி 1424 ஷஃபான் 04ல் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு உங்களுக்கு நினைவுகாட்டி இருக்கிறேன். அதாவது, 'விவாதம் நடத்துவதைப் பற்றி நான் கூறியதாவது, 'என்மீது ஒரு அப்பட்டமான பொய்யை சுமத்துகின்றீர்கள்" என்று அந்த மடலில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.!

 அதேபோன்று உங்களை நோக்கி கேள்வி கேட்கப்படும் போது அதற்க்குத் தகுந்த பதிலைக் கொடுக்குமாறும் நாம்கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறில்லாமல் சூழ்ச்சியான பேச்சுக்களையும் உதாரணங்களையும் காட்டி கேள்வி கேட்பவரை குழப்பிவிடவேண்டாம் உதாரணமாக! சகோதரர் அஹ்மத் பிர்தவ்ஸ் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலாகக் கூறும் வார்த்தைகள்

 '
நிங்கள் இப்போது மின்னஞ்சல் வழியாக உங்கள் மறுப்பை பதிவு செய்துள்ளீர்கள் இப்படி நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் பதிவு செய்தார்களா? "

 இது உங்களின் மயக்கும் வழியாகும், ஏனென்றால் மின்னஞ்சல் உலக விடயமாகும், நீங்களே உங்கள் பதிலில் அதனை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் நீங்கள் கூறியுள்ளதாவது :

'வணக்க வழிபாட்டுக்கு மட்டும்தான் நீங்கள் கூறுவது போல் பார்க்க வேண்டும் மற்ற விடயங்களுக்கு அடிப்படையான அனுமதியிருப்பதே போதுமாகும். "

 இங்கே சகோதரர் அஹ்மத் பிர்தவ்ஸ் மீதும் அபாண்டத்தை கூறுகிறீர்கள்: வணக்க வழிபாட்டுக்கு மட்டும்தான் நீங்கள் கூறுவது போல் சகோதரர் அஹ்மத் பிர்தவ்ஸ் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலைக் கொடுக்காமல் விடயத்திற்கு சம்பந்தமில்லாத பல கேள்விகளை நீங்களே உருவாக்கி அதற்க்கு பதிலையும் நீங்களே சொல்லி கேள்வி கேட்டவர் மீது அபாண்டத்தையும் கூறி அவரின் சிந்தனையை வேறுதிசையில் திசைதிருப்புவதே உங்களின் வழிமுறையாக இருந்தது.

 உங்கள் திசை திருப்பும் கேள்விகளுக்கு உதாரணங்கள்

நீங்கள் இப்போது மின்னஞ்சல் வழியாக உங்கள் மறுப்பை பதிவு செய்துள்ளீர்கள். இப்படி நபி  அவர்கள் பதிவு செய்தார்களா?

வேறு வகையில் தமது மறுப்பை முஸைலமா உள்ளிட்டவர்களுக்கு எழதி அனுப்பினார்களா?

இஸ்லாத்தின் பால் சில மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்களே தவிர வழிகெட்ட கொள்கையின் தலைவர்களுக்கு எந்தக் கடிதத்தையும் எழுதவில்லை இதன்படி நபி வழியில் இல்லாத ஒரு முறையைக் கையாண்டு நீங்கள் ஏன் எமக்கு எழத வேண்டும்?

உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால் அவர்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிவிட்டுப் போகட்டும் என்று இருக்க வேண்டுமே தவிர நபி  அவர்கள் காட்டாத வழியில் நீங்கள் ஏன் உங்கள் மறுப்பை தெரிவிக்க வேண்டும்?

உங்கள் இந்த கேள்விகளுக்கு சுருக்கமாக நான் பதிலை அமைக்கிறேன்.

 மின்னஞ்சலைக் கையாள்வது உலகவிடயமென்பதன் அடிப்படையில் அது மார்க்கத்திற்கு தடுக்கப்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முஸைலமதுல் கத்தாப் (كذاب) என்பதை இஸ்லாமிய உம்மத் பாவிக்கும் பட்டத்தை நீங்கள் முஸைலமா என்று மட்டும் பாவிக்க முன் வருவதே நபி 
صلى الله عليه و اله و سلم‎ அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத தன்மையாகுமென்பது மட்டுமின்றி நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் தமது மறுப்பை முஸைலமா உள்ளிட்டவர்களுக்கு எழுதியனுப்பினார்களா? என்றும் கேள்வி கேட்கிறீர்கள். அவ்வாராயின், நீங்கள் ஒன்றோ முஸைலமதுல் கத்தாப் போன்ற ஒருவனாக இருக்க வேண்டும். அல்லது அவனைவிடவும் மோசமானவனாக இருக்க வேண்டும். அவ்வாறில்லையென்றால் நீங்கள் ஏன் இந்த உதாரணத்தை சம்பந்தமாக்குகின்றீர்கள். குர்ஆனிலும் நபி வழியிலும் அசத்தியங்களை மறுத்திருப்பதை நீங்கள் அறியாதவரா? அல்லது அறியாதவர்போல் நடிக்கிறீர்களா?

அசத்தியத்துக்கு மறுப்பு கொடுக்காமல் இருக்கும் நபிவழியென்று சொல்கின்ற நீங்கள் உங்களை நபிவழியை பற்றி ஒரு மடையன் என்று நிரூபிக்கிறீர்கள். நபிவழியே அசத்தியங்களை மறுக்க வந்த வழியாகும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். வழிகேடர்களைப் பார்த்து 'அவர்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிவிட்டுப்போகட்டும் என்று இருக்க வேண்டுமே தவிர" நபி வழியென்று கருதுகின்றது நபி வழிக்கு சுமத்தும் ஒரு அபாண்டமாகும். மாறாக நபி வழி வந்தது அசத்தியத்தை மறுக்கவே. உங்களுக்கு நபி வழியை பற்றி பேசுவதற்கு ஒரு உரிமையும் கிடையாது ஏனென்றால் நாம் நபி 
صلى الله عليه و اله و سلم‎ வழியைக் காட்டும் பொழுது நீங்கள் உங்கள் தனி வழியில் வாதாடுகின்றவராக இருக்கின்றீர்கள்.

 தயவுசெய்து இவைகளை நபி வழியில் சம்பந்தமாக்குவது அபாண்டமாகும்.

 உங்கள் வசனம் 'பித்அத்தை நாம் எதிர்க்கும் போது அதற்க்கு பதில் சொல்ல முடியாத பித்அத்வாதிகள் காரில் போவது பித்அத் இல்லையா? வாச் கட்டுவது பித்அத் இல்லையா? என்று கேட்பார்கள்" என்று நீங்கள் சொல்வது உங்களுக்கு உரித்தாகும். அவன் 'காரையும்" 'வாச்iயும்" கேட்டான் நீங்கள் 'மின்னஞ்சலையும்" 'கடிதத்தையும்" கேட்டீர்கள். அந்தக் கேள்விக்கும் உங்கள் கேள்விக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. இதுவே உங்களை நீங்களே பித்அத்வாதி என்று உங்கள் வார்த்தைகளினாலேயே நிரூபித்துவிட்டீர்கள் என்பதற்கு தக்க சான்றாகும்.

 இன்னும் நீங்கள் தோற்றுவித்த குழப்பங்களாகிய பத்திரிகை நடத்தி தஃவா செய்வது, மத்ரஸாவில் பட்டங்கள் அளிக்கப்படுவது, காகிதத்தில் குர்ஆன் அச்சிடுவது, குர்ஆனை மொழிபெயர்ப்பிலிடுவது, சிமன்ட் இரும்புகளை பயன் படுத்தி பள்ளிவாசல் கட்டுவது நபி வழியில் அனுமதிக்கப்பட்டது என்பது உங்களினது அறியாமையை எடுத்துக் காட்டுகின்றது.

நாம் நபி வழியை சொல்லும் போது பித்அத்வாதியின் வழிமுறைகளை நீங்கள் உதாரணமாக எடுத்து எங்கள் 'பத்வாவாக ஆகுமா?" என்று கேட்கின்றீர்கள். இதுவே உங்களுக்கு பித்அத்வாதியும் நபி வழியும் ஒன்றாகிவிட்டது என்பதனை தெளிவாக்கின்றது. இதற்காகதான் நான் உங்களை நபி வழியை பற்றிப் பேசவேண்டாம் என்று கூறுகின்றேன்.

நீங்கள் நபி வழியை பற்றிப் பேசுவது நபியின் மேல் சுமத்தும் ஒரு அபாண்டமாகுமே தவிர நபி வழியை எடுத்துக்காட்டியது கிடையாது. அரபி பல மொழியில் வந்த மாதிரி 

 'இல்லாதவன் மற்றவனுக்கு கொடுக்க முடியாது"

 என்ற அடிப்படையில் நீங்கள் தனக்கென்று தனி வழியை உருவாக்கி இருக்கின்ற காரணத்தினால் நபி வழியைத் தெரிந்தவரல்ல.

 இன்னும் நீங்கள் கூறும் வசனம் 'விவாதம் நடந்தபின் நாங்கள் தான் வெற்றி அடைந்தோமென்று ஒவ்வொரு தரப்பும் கூறிக் கொண்டாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். ஒவ்வொரு விவாதத்திற்குப் பிறகும் நமது கொள்கை பெருமளவு வளர்ந்துள்ளது இதற்க்கு சாட்சியாக உள்ளது"

எமது கொள்கை பெருமளவு வளரந்துள்ளதே என்பதினால் விவாதம் செய்வதை சரி காண்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் பார்க்க பெரிதாக வளந்திருக்கின்ற கூட்டம் ஷைத்தானின் கூட்டமாகும். இதை நீங்கள் எங்களுக்கு உதாரணமாகக் காட்டுவது எமக்கு ஆச்சரியமில்லை.
நாம் எப்பெழுதுமே உதாரணமென்றும், ஆதாரமென்றும் நபி வழியை தவிர்த்து எமது கொள்கை என்று வாதாடமாற்றோம். நபி வழியை தவிர எதுவெல்லாமோ மார்க்கமாகி விட்டதோ அவை அனைத்தும் நரகம் செல்லும் வழி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம.; இந்த நரகத்தின் பாதையில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே நான் உங்களுக்குக்  கேட்ட நான்கு கேள்விகளை தயவு செய்து படித்து புரிந்து பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

இது உங்களை வழிகேட்டில் இருந்து தப்பவைத்து இஸ்லாத்தில் சிறப்பாக நுழைவதற்கு ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். இன்னும் அல்லாஹ்விடம் கேட்கிறேன்.

'அல்லாஹ்வே எங்களுக்கு சத்தியத்தை சத்தியமாக காட்டித்தந்து அதை பின்பற்றுவதற்கும் சக்தி தருவாயாக, இன்னும் அசத்தியத்தை அசத்தியமாக காட்டித்தந்து அதைத் தவிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பு அளித்து விடுவாயாக".


 

சகல வல்லiமிக்க அல்லாஹ்விற்கு புகழ் சேர்த்து இறுதி நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்களின் மீது ஸலாமும் ஸலவாத்தும் கூறி  அபூ அப்துர் ரஹ்மான் 
யஹ்யா சில்மி பின் முகம்மது நு}பார் பின் உஸ்மான் பின் நு}ஹ் லெப்பை
ஆல மரிக்கார் அல் யமனி அஸ் ஸைலானி அஸ் ஸலபி அல் அதரி
ஆகிய நான் நபி அவர்கள் மதீனாவை நோக்கி இடம் பெயர்ந்த ஹிஜ்ரத்திலிருந்து 1431இல் ஜமாதுஸ் ஸானி 27ம் திகதியில் எழுதினேன்.