Tuesday, July 13, 2010

தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் - ஒரு பார்வை

இன்று உண்மையில் தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் தவ்ஹீதைத் தான் போதித்துக் கொண்டிருக்கின்றனவா என்று யோசித்தால் இல்லை என்பதே பதிலாகும். இவர்கள் போதித்துக்கொண்டு இருப்பதெல்லாம் தவ்ஹீத் என்ற பெயரில் பகுத்தறிவு மசாலா கலந்த புதிய மார்க்கத்தைத் தான். 

இவர்கள் போதிக்கும் இந்த புதிய அனுகுமுறை, நவீன சிந்தனைகளான பெண்ணுரிமை, பகுத்தறிவு, தர்க்கம், 
தத்துவம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் ஆகியவையால் உந்தப்பட்டவை. இவர்கள் இஸ்லாத்தை நவீன 
சிந்தனைகளுக்கு ஏற்ற மார்க்கமாக மாற்றத் துடிக்கின்றனர். அதே கண்ணோட்டத்துடன் குர்ஆனையும் சுன்னாவையும் அனுகினர். தங்கள் புத்தியையே மார்க்கமாகக் கண்டனர்.

இவர்கள் குர்ஆனை விருப்பம்போல் விளங்கிக் கொள்ளலாம் என்றுக் கூறி விட்டனர். அந்த விளக்கம் 
ஸஹாபாக்களுடைய ஏகோபித்த விளக்கத்திற்கு முரணாக இருந்தாலும் அதைச் சரி காண்கின்றனர் இந்த சண்டாளர்கள்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "ஸஹாபாக்களும் மனிதர்கள் தான். அவர்கள் காலத்தில் நவீன வசதிகள் எல்லாம் இல்லை. எனவே அவர்களைக் காட்டிலும் நாம் நல்ல முறையில் குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க இயலும்". எனவே இவர்கள் குர்ஆனில் தம்முடைய மனோஇச்சையை மார்க்கமாகக் கண்டனர். அதையே குர்ஆனின் விளக்கம் என்றும் கூறினர். ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்களும் தவறாக விளங்கிக் கொண்டதைத் தாங்கள் தான் சரியாக விளங்கினோம் என்று வாதிட்டனர்.

ஸஹீஹான ஹதீஸ்கள் சில குர்ஆனுக்கு முரண்படுகின்றன எனக் கூறி அவற்றை நிராகரித்தனர். உண்மையில் அவை அவர்களின் வழிகெட்ட புத்திக்கு தான் முரண்பட்டன, குர்ஆனுக்கு அல்ல. இவர்களின் வழி வருவோர் இன்னும் பல ஹதீஸ்களை இதே காரணத்தைச் சொல்லி நிராகரிப்பர் என்பது திண்ணம்.

குர்ஆனை அவரவர் தம்முடைய அறிவைப் பயன்படுத்தி விளங்கலாம் என்றால், 'அல்லாஹ்வுடன் மற்ற 
கடவுளரையும் சேர்த்து வணங்குவதற்கும்' அல்லது 'அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும்' கூட இவர்களின் கொள்கை வழித்தோன்றல்கள் குர்ஆனிலிருந்தே ஆதாரம் காட்டுவர் என்பது என் எண்ணம்.(அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக) அப்பொழுதும் கூட "ஸஹாபாக்கள் எல்லாம் இதை தவறாக விளங்கி விட்டனர், நாங்கள் தான் சரியாக விளங்குகிறோம்" எனக் கூறுவர்.

தாங்கள் ஊறிய தமிழக திராவிட அரசியலின் தாக்கத்தால் ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டனர். இழிவான நாற்றமெடுக்கும் வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினர். இதற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரம் இருப்பதாக அபாண்டம் கற்பித்தனர்.

அல்லாஹ் இந்த வழிகெட்ட பகுத்தறிவு வாதிகளிடமிருந்து நம்மைக் காப்பற்றுவானாக!

No comments:

Post a Comment