Friday, July 16, 2010

ஜாகிர் நாயக்கும் அவர்தம் தாஃவாவும்

ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவருக்கு தாவா செய்கிறார் என்பதால், அவர் அல்லாஹ்வை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்ல அனுமதி இல்லை. அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ் மட்டுமே எல்லாம் அறிந்தவன். நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் தன் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலம் நமக்கு தெரிய வைத்தவை மட்டுமே. அதற்கு மேலாக நாம் அல்லாஹ்வை பற்றி வர்னித்தால், அந்த வர்னனை ஒரு வேலை சரியாக இருந்தாலும் அது பெரும் பாவமாகும்.

எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!
(அல் குர்'ஆன் 7:33)
 
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்(தான் அதனை) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்.
(அல் குர்'ஆன் 16:74)

அல்லாஹ்வை பற்றி இட்டுக்கட்டி கூறுவது இனைவைக்கும் பாவத்துடன் சேர்த்து அல்லாஹ் நமக்கு சொல்லியுள்ளான்.இது எவ்வளவு பெரிய பாவம் என்று நாம் என்னிப்பார்க்க வேண்டும்.

" அல்லாஹ் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் இட முடியும்" என்று சொல்வது மிகப்பெரிய பாவமான வார்த்தைகள். அல்லாஹ் செய்ய முடியாது என்று அவன் ஜாக்கிர் நாயக் அவர்களுக்கு வஹீ மூலமாக அறிவித்தானா ? அல்லாஹ் தன் ஆற்றலை பற்றி நமக்கு எந்த அளவில் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலமாக தெரிவித்துள்ளானோ, அதை மட்டும் நமக்கு போதுமானதாக ஆக்கிக்கொண்டு தேவை இல்லாத மேதாவித்தனமான பகுத்தறிவு, லாஜிக் போன்றவற்றினால் நாம் அல்லாஹ் மீது வைத்துள்ள ஈமானை நாமே சிதைக்க வேண்டாம்.

"என் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவள் கையை வெட்டுவேன்" என்று சொன்ன நபியின் மார்கத்தில் நாம் வந்து, "ஜாக்கிர் நாயக் இப்படி செய்தால் பரவாயில்லை, அவர் தாயீ" என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை. இஸ்லாத்தையே சிதைத்து செய்யும் தாவா நமக்கு தேவை இல்லை.அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு, அல்லாஹ் பற்றியே இட்டுக்கட்டலாமா? இது எப்படி உள்ளது என்றால் அல்லாஹ் இசையை ஹராமாக ஆக்கியுள்ளான். ஆனால் இந்த ஹராமை வைத்துகொண்டு அல்லாஹ்வை பற்றியே பாடுகிறார்கள். செய்வது எவ்வளவு பரிசுத்தமான மனதுடன் செய்தாலும் இஸ்லாத்தை தகர்க்கும் விதமாகவும் சுன்னாஹ் இல்லாமல் செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. வல்லாஹு அஃலம்.


--சகோ. மஸூத் பின் அஹ்மத் (இணையதளம் ஒன்றில்)

Tuesday, July 13, 2010

தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் - ஒரு பார்வை

இன்று உண்மையில் தமிழக தவ்ஹீத் இயக்கங்கள் தவ்ஹீதைத் தான் போதித்துக் கொண்டிருக்கின்றனவா என்று யோசித்தால் இல்லை என்பதே பதிலாகும். இவர்கள் போதித்துக்கொண்டு இருப்பதெல்லாம் தவ்ஹீத் என்ற பெயரில் பகுத்தறிவு மசாலா கலந்த புதிய மார்க்கத்தைத் தான். 

இவர்கள் போதிக்கும் இந்த புதிய அனுகுமுறை, நவீன சிந்தனைகளான பெண்ணுரிமை, பகுத்தறிவு, தர்க்கம், 
தத்துவம், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் ஆகியவையால் உந்தப்பட்டவை. இவர்கள் இஸ்லாத்தை நவீன 
சிந்தனைகளுக்கு ஏற்ற மார்க்கமாக மாற்றத் துடிக்கின்றனர். அதே கண்ணோட்டத்துடன் குர்ஆனையும் சுன்னாவையும் அனுகினர். தங்கள் புத்தியையே மார்க்கமாகக் கண்டனர்.

இவர்கள் குர்ஆனை விருப்பம்போல் விளங்கிக் கொள்ளலாம் என்றுக் கூறி விட்டனர். அந்த விளக்கம் 
ஸஹாபாக்களுடைய ஏகோபித்த விளக்கத்திற்கு முரணாக இருந்தாலும் அதைச் சரி காண்கின்றனர் இந்த சண்டாளர்கள்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "ஸஹாபாக்களும் மனிதர்கள் தான். அவர்கள் காலத்தில் நவீன வசதிகள் எல்லாம் இல்லை. எனவே அவர்களைக் காட்டிலும் நாம் நல்ல முறையில் குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க இயலும்". எனவே இவர்கள் குர்ஆனில் தம்முடைய மனோஇச்சையை மார்க்கமாகக் கண்டனர். அதையே குர்ஆனின் விளக்கம் என்றும் கூறினர். ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்களும் தவறாக விளங்கிக் கொண்டதைத் தாங்கள் தான் சரியாக விளங்கினோம் என்று வாதிட்டனர்.

ஸஹீஹான ஹதீஸ்கள் சில குர்ஆனுக்கு முரண்படுகின்றன எனக் கூறி அவற்றை நிராகரித்தனர். உண்மையில் அவை அவர்களின் வழிகெட்ட புத்திக்கு தான் முரண்பட்டன, குர்ஆனுக்கு அல்ல. இவர்களின் வழி வருவோர் இன்னும் பல ஹதீஸ்களை இதே காரணத்தைச் சொல்லி நிராகரிப்பர் என்பது திண்ணம்.

குர்ஆனை அவரவர் தம்முடைய அறிவைப் பயன்படுத்தி விளங்கலாம் என்றால், 'அல்லாஹ்வுடன் மற்ற 
கடவுளரையும் சேர்த்து வணங்குவதற்கும்' அல்லது 'அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும்' கூட இவர்களின் கொள்கை வழித்தோன்றல்கள் குர்ஆனிலிருந்தே ஆதாரம் காட்டுவர் என்பது என் எண்ணம்.(அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக) அப்பொழுதும் கூட "ஸஹாபாக்கள் எல்லாம் இதை தவறாக விளங்கி விட்டனர், நாங்கள் தான் சரியாக விளங்குகிறோம்" எனக் கூறுவர்.

தாங்கள் ஊறிய தமிழக திராவிட அரசியலின் தாக்கத்தால் ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டனர். இழிவான நாற்றமெடுக்கும் வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினர். இதற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரம் இருப்பதாக அபாண்டம் கற்பித்தனர்.

அல்லாஹ் இந்த வழிகெட்ட பகுத்தறிவு வாதிகளிடமிருந்து நம்மைக் காப்பற்றுவானாக!

Saturday, July 3, 2010

யூத நாட்டை இஸ்ராயில் எனப் பெயர் சூட்டி அழைப்பது சம்பந்தமாக

கேள்வி:
தீமை நிறைந்த நிராகரிக்கும் யூத நாட்டை'இஸ்ராயில்' என்று சொல்வதும் இந்த பெயரை வைத்து அந்த நாட்டை தரம் தாழ்த்தி பலி சொல்வதும் ஆகுமானதா ?

பதில்:
இது ஆகுமானது இல்லை என்பதுதான் சரியானது. யூதர்கள் ஒரு பெரிய சதியை செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் இடங்களில் அவர்களுக்கு (நமது நபியின் பெயரான) இஸ்ராயில் என்ற பெயரில் நாடு அமைக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணம் கொண்டுள்ளார்கள். இந்த சதியில் முஸ்லிம்களும் வீழ்ந்துள்ளார்கள். 'இஸ்ராயீல்' என்ற வார்த்தையை முஸ்லிம்கள் எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் உபயோகிக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் 'இஸ்ராயில்' என்ற வார்த்தையை தரம்தாழ்த்தி சாபமிடக்கூடச் செய்கிறார்கள்..

அல்லாஹ் தன் குர்ஆனில் யூதர்களை சபித்துள்ளான். 'அல் யஹூத்' என்றும், 'பனி இஸ்ராயிலில் நிராகரித்தவர்' என்றும்தான் அவர்களை சபிக்கிறான். 'இஸ்ராயில்' என்று உத்தம நபி யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரில் அவர்களை கேவலப்படுத்தவில்லை. யூதர்களுக்கும் நபிமார்களான யாக்கூப் மற்றும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கும் எந்த மார்க்க உறவும் இல்லை. அந்த நபிமார்களின் மார்க்கத்தின் உரிமை ஈமான் கொண்டவர்களான நம் முஸ்லிம் சமுதயாத்திற்க்குத்தான் உள்ளது.

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். (அல் குர்'ஆன் 3:68) 

ஷைக் ரபீய் பின் ஹாதி அல் மத்கலீ 
Check with Article ID: CAF030001

குறிப்பு :
அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளான இந்த தீமையான நாட்டுக்கு 'இஸ்ராயில்' என்ற புனித நபியின் பெயரைச் சூட்டி அழைப்பது மட்டுமல்லாமல் 'பயங்கரவாதி இஸ்ராயில்', 'தீமையான இஸ்ராயில்', 'மனித விரோதி இஸ்ராயில்' என்று நமது நபியை மறைமுகமாக நாமே தரம் தாழ்த்துவது தவறாகும். யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்று உயிரோடு இருந்தால் இப்படிச் சொல்வதை அவர்கள் விரும்புவார்களா என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வது அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்குமா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கும் அவனுடைய பொறுத்தத்திற்கும் தகுதியான விதத்தில் வாழ அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

ஆக்கம்: மஸூத் பின் அஹமத்