Friday, July 16, 2010

ஜாகிர் நாயக்கும் அவர்தம் தாஃவாவும்

ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவருக்கு தாவா செய்கிறார் என்பதால், அவர் அல்லாஹ்வை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்ல அனுமதி இல்லை. அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ் மட்டுமே எல்லாம் அறிந்தவன். நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் தன் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலம் நமக்கு தெரிய வைத்தவை மட்டுமே. அதற்கு மேலாக நாம் அல்லாஹ்வை பற்றி வர்னித்தால், அந்த வர்னனை ஒரு வேலை சரியாக இருந்தாலும் அது பெரும் பாவமாகும்.

எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!
(அல் குர்'ஆன் 7:33)
 
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்(தான் அதனை) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்.
(அல் குர்'ஆன் 16:74)

அல்லாஹ்வை பற்றி இட்டுக்கட்டி கூறுவது இனைவைக்கும் பாவத்துடன் சேர்த்து அல்லாஹ் நமக்கு சொல்லியுள்ளான்.இது எவ்வளவு பெரிய பாவம் என்று நாம் என்னிப்பார்க்க வேண்டும்.

" அல்லாஹ் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் இட முடியும்" என்று சொல்வது மிகப்பெரிய பாவமான வார்த்தைகள். அல்லாஹ் செய்ய முடியாது என்று அவன் ஜாக்கிர் நாயக் அவர்களுக்கு வஹீ மூலமாக அறிவித்தானா ? அல்லாஹ் தன் ஆற்றலை பற்றி நமக்கு எந்த அளவில் குர்ஆன் மற்றும் சுன்னாஹ் மூலமாக தெரிவித்துள்ளானோ, அதை மட்டும் நமக்கு போதுமானதாக ஆக்கிக்கொண்டு தேவை இல்லாத மேதாவித்தனமான பகுத்தறிவு, லாஜிக் போன்றவற்றினால் நாம் அல்லாஹ் மீது வைத்துள்ள ஈமானை நாமே சிதைக்க வேண்டாம்.

"என் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவள் கையை வெட்டுவேன்" என்று சொன்ன நபியின் மார்கத்தில் நாம் வந்து, "ஜாக்கிர் நாயக் இப்படி செய்தால் பரவாயில்லை, அவர் தாயீ" என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை. இஸ்லாத்தையே சிதைத்து செய்யும் தாவா நமக்கு தேவை இல்லை.அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு, அல்லாஹ் பற்றியே இட்டுக்கட்டலாமா? இது எப்படி உள்ளது என்றால் அல்லாஹ் இசையை ஹராமாக ஆக்கியுள்ளான். ஆனால் இந்த ஹராமை வைத்துகொண்டு அல்லாஹ்வை பற்றியே பாடுகிறார்கள். செய்வது எவ்வளவு பரிசுத்தமான மனதுடன் செய்தாலும் இஸ்லாத்தை தகர்க்கும் விதமாகவும் சுன்னாஹ் இல்லாமல் செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. வல்லாஹு அஃலம்.


--சகோ. மஸூத் பின் அஹ்மத் (இணையதளம் ஒன்றில்)

2 comments:

  1. "அல்லாஹ் செய்ய முடியாத 1000 விஷயங்களை என்னால் பட்டியல் போட முடியும்" என்று ஜாக்கிர் நாயக் எங்கே எப்போது சொன்னார்? ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆதாரம் தருக.

    ReplyDelete
  2. தயவு செய்து கீழ்கண்ட லிங்கை பார்க்கவும். http://www.youtube.com/watch?v=Vodc4lzZgM8&feature=related

    ReplyDelete