Sunday, June 27, 2010

பர்ளு தொழுகைகளுக்குப் பின் ஓத வேண்டிய சுன்னத்தான திக்ருகள்

     ஐவேளை பர்ளு தொழுகைகளுக்குப் பின்

1) اََََسْتََغْفِِرُ اللهَ

(3 முறை)

அல்லாஹ்விடம்  நான் பிழை பொறுக்கத் தேடுகிறேன்

--------------------------------------------------------------------------

2) اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ, وَمِنْكَ السَّلاَمُ, تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإكْرَامِ.

(1 முறை)

யா அல்லாஹ்! நீ சாந்தி மயமானவன். உன்னிடமிருந்தே சாந்தி உண்டாகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன்.

3) لاَ إلَهَ إلاّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ

 لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

 (1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

குறிப்பு: ஸுபுஹ் மற்றும் மஃரிபு தொழுகைகளில் மட்டும் وَلَهُ الْحَمْدُ க்குப் பின் يُحْيِيْ وَ يُمِيْتُ என்று சேர்த்து

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَ يُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

 என 10 முறை ஓதவும்.

4) اَللَّهُمَّ لاَ مانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِماَ مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

(1 முறை)

யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்கமாட்டாது.

--------------------------------------------------------------------------

5) اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِباَدَتِكَ

(1 முறை)

யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!

--------------------------------------------------------------------------

6) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ  وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

(1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

. ------------------------------------------------------------------------

7) لاَحَوْلَ وَلاَ  قُوَّةَ إلاَّ بِاللهِ

(1 முறை)

தீமையை விட்டு விலகுவதற்கு வலிமையும் நன்மையை செய்வதற்கு ஆற்றலும் அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை.

--------------------------------------------------------------------------

8) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِياَّهُ لَهُ النِّعْمَةَ وَلَهُ الْفَضْلُ

وَلَهُ الثَّناَءُ الْحَسَنُ

(1 முறை)

வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவனையன்றி வேறு யாரையும் நாம் வணங்கவில்லை.எல்லா அருட்கொடைகளும், பாக்கியங்களும், அழகிய புகழ்ச்சிகளும் அவனுக்கே உரியன.

9) لاَإِلَهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنُ وَلَوْ كَرِهَ الْكاَفِرُوْنَ.

(1 முறை)

வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. நாம் நம்முடைய தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிவிட்டோம். அது நிராகரிப்போருக்கு வெறுப்பாக இருந்தாலும் சரியே.

10)

سُبْحَانَ الله  (அல்லாஹ் மிகத் தூமையானவன்)-33 முறை

11)

اَلْحَمْدُ لِلَّه (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)-33 முறை

12)

اَللهُ أَكْبَر (அல்லாஹ் மிகப் பெரியவன்)-33 முறை

13) لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ, لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ  عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرُ.

(1 முறை)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்  யாரும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். 

--------------------------------------------------------------------------

14) آيَةُ الْكُرْسِيِّ

(1 முறை)

--------------------------------------------------------------------------

15)

சூரா இஹ்லாஸ்(قُلْ هُوَ اللهُ أَحَدُ சூரா)-1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

--------------------------------------------------------------------------

16)

சூரா ஃபலக்(قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَق சூரா) - 1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

--------------------------------------------------------------------------

17)

சூரா நாஸ்(قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ சூரா) - 1 முறை

(ஸுபுஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளில் மட்டும் 3 முறை)

--------------------------------------------------------------------------

No comments:

Post a Comment