Friday, June 11, 2010

கடன் அட்டைகள் (Credit cards) பற்றி இஸ்லாமியத் தீர்ப்பு

கடன் அட்டைகள் (Credit cards) என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு வழங்கும் ஒரு மின்னனு அட்டை (Electronic card). அந்த அட்டையைக் கொண்டு வாடிக்கையாளர் எந்த கடையில் வேண்டுமானாலும் பணம் ஏதும் செலுத்தாமல் பொருட்களை வாங்க முடியும். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் வங்கியிடம் அந்த தொகையை வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்துவார்.

உதாரணமாக. ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கடையில் சாமான்கள் வாங்குகிறார். அவர், அந்த ஆயிரம் ரூபாயை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (உதாரணம்: ஒரு மாதம்) அந்த வங்கிக்கு செலுத்தி விடவேண்டும். அந்த ஒரு மாத காலத் தவனை முடிந்த பிறகும் அவர் கடனை திருப்பிச் செலுத்த தவறினால் அவர் அசலை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும்.
அதாவது, அவர் ருபாய் 1100ஆக 2வது மாதத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, அவருடைய காலத்தாமதத்திற்கேற்ப அவர் அதிக வட்டி செலுத்த வேண்டும். ஒருவர் அந்த குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள்
வட்டி ஏதும் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்தினாலும், இந்த வகையான கடன் அட்டைகள் ஹராமாகும். 

ஏனெனில், அவர் 'காலத்தாமாதமானால் வட்டி செலுத்துவேன்' என்று வங்கியுடன் உடன்படிக்கை செய்கிறார். இந்த வகையான உடன்படிக்கையே ஹராமாகும். மேலும், எதிர்காலம் குறித்த ஞானம் அவரிடம் இல்லை. அவருடைய சூழ்நிலைகள் அவரை வட்டி செலுத்துமாறு செய்துவிடலாம். எனவே, இந்த வகையான வியாபார பரிவர்தனைகள் ஹாராமானாவை ஆகும்.

2 comments:

  1. i have a question..Using medical insurance cards issued by companies in saudi and elsewhere in the muslim lands to the employees by their employees as per the contract terms to cover the medical expenses is HARAAM or allowed.
    i sent this to Dar Salaf also..

    ReplyDelete
  2. Assalaamu Alaikum Akhee Abu Aaysha! I don't know the answer. Ask the people of knowledge.

    ReplyDelete